Tuesday, August 14, 2007

என் உயிர்த் தோழா

பத்து வயதில் பல் இளித்தாய்
கை கோர்த்தாம் இருவரும்
என் வெற்றிப்படியின் ஒவ்வோரடியிலும்
நீ துணையாய்
நீ இன்றித் தேர்வேதும் எழுதியதில்லை
உனைப் பிரிந்தால் சம்பளமும் எனக்கில்லை

என் காதலுக்குத் தோள் கொடுத்தாய்
எனக்காகக் கவிதைகள் வடித்தாய்
திருமணமும் நீ நடத்தி வைத்தாய்

இத்தனையும் செய்த நீ
ஏனடா தொலைந்து போனாய் யென்னைவிட்டு
என் உயிர்த் தோழா....
.
.
.
என் ஊற்றுப் பேனா

முதல் பதிவு

இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்



விழித்துக்கொள்.....



நாம் வளர்ந்துவிட்டோம்

ஜனநாயகத்தில் அல்ல

ஜனத்தொகையில்



நாம் வாழ்ந்துவிட்டோம்
வருமானத்தில் அல்ல
வ்றுமையில்



நாம் சாதித்துவிட்டோம்
சாதனையில் அல்ல
சாதிகளில்



நாம் பெருக்கிவிட்டோம்

அறிஞர்களை அல்ல

அரசியல்வாதிகளை



நாம் தூங்கிவிட்டோம்

படுக்கையில் அல்ல

ஓட்டுச்சாவடியில்



இனி ஒரு முறை உறங்கினால்

உறக்கமே இல்லாமல் போகும்

விழித்துக்கொள்..........